திங்கள், 10 ஜனவரி, 2011

அம்மா அப்பா

அம்மா அப்பா நினைவஞ்சலி


"தாயிற் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை"
எவ்வளவு உண்மையான வரிகள் ஆம் அவர்கள் நம்முடன் இருக்கும் பொது அவர்கள் அருமை தெரியவில்லை இப்பொழுது புலம்பி என்ன செய்ய...........
அம்மாவுடன் மேல்நிலை இரண்டாம் ஆண்டு வரை அம்மா அருகிலேய படுத்திருந்த நினைவுகள் மேல்நிலை இரண்டாம் ஆண்டு முடித்து விட்டு மும்பை செல்லும்போது பேருந்து நிலையத்தில் கண்ணீர் விட்டு அழுதது அன்று முழுவதும் அழுதுகொண்டே இருந்தார்களாம்  (அக்கா சொல்லி தெரிந்தது ) காலம் கடந்து விட்டது 14  வருடங்கள் 14  நாட்களாக கடந்துவிட்டது தினமும் நினைக்கிறேன் தினமும் கண்ணீர் வருகிறது அப்பா ஒரு நாளும் எங்களை கண்டு கொண்டதே இல்லை என்று கூறலாம் .

ஆனால் இரவு அப்பாவும் அம்மாவும்  பேசி கொள்வது இன்னும் காதில்  கேட்கிறது நான்கு பெண் குழந்தைகள் வயதுக்கு வந்து விட்டார்கள் நான்கு பேரையும் எப்படி திருமணம் செய்து வைக்க போகிறோம்.ஆனால் எனக்கும் விசா கிடைத்தது துபாய் செல்வதற்கு ஏற்பாடு செய்து கொண்டு இருக்கும் பொழுது அம்மா இறந்து விட்டார்கள் அதற்கு பிறகுதான் வாழ்கையில் ஒரு தேடுதல் எனக்கு வந்தது. 

அதன் பிறகு நான்கு சகோதரிகளுக்கும் திருமணம் முடிந்தது கடைசி தங்கையின் திருமண நாள் அன்று கடைசியில் அப்பா அம்மா முன்பு இரவில் பேசிய வார்த்தைகள் மனதில் வந்து இன்ப கண்ணீராக மாறியது. இப்போதும் ஒருகணம் அவர்களை நினைத்தால் அப்போதே மனதில் ஒரு தைரியம் ஒரு நல்ல தெளிவு கிடைகிறது நாளை (11 /01 /2011 ) அம்மாவின் நினைவு நாள் நீ நினைத்தது போல் நான் நன்றாக இருக்கிறேன் அம்மா உன் பாதங்களுக்கு என் மலரஞ்சலி


   இப்போது துபாய் வாழ்கை என்மகன் இப்போது கேட்கிறான் அப்பா இனி ஊருக்கு வந்து விடுங்கள் துபாய் போக வேண்டாம் என்று தொலை பேசியில் கூறுகிறான்

இதோ அப்பா வந்து விடுகிறேன்

ஏதோ மனதில் தோன்றியதை எழுதினேன் பிடித்திருந்தால் ஒட்டு போடுங்கள்

அன்புடன்
 நெல்லை பெ.நடேசன்
அமீரகம்  

திங்கள், 1 நவம்பர், 2010

மனித நேயம்


அனைவருக்கும் எண் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

மனித நேயம்
துபாய் ஒரு தொழிலாளர் விடுதியில் எங்கேயோ அடிபட்ட பூனை குட்டியை தூக்கி வந்து அதற்கு கட்டு போட்டு விட்டார்கள் இப்போது அந்த பூனை கட்டு அவிழ்க்க பட்டு நன்றாக விளையாடி கொண்டிருக்கிறது அந்த பூனைக்கு கட்டு போட்டவர் ஒரு பாகிஸ்தானி அதற்கு தினமும் உணவளிக்கிறார்
=================================================================
பதிவு எழுத ஆசை
அண்ணன் ஜாகிசேகர் அவர்களுடைய எழுத்தை படிக்கும்போது அவர்களுடைய வெளிபடையான சிந்தனை எனக்கு மிகவும் பிடிக்கும் சமீபத்தில் ஈரோடு கதிர் அவர்கள் எழுதிய ஸ்ரீலங்கா பயணம் பற்றி வாசித்த பொது என்னை அறியாமல் கண்களில் நீர் வந்தது ஒரு உணர்வு பூர்வமான் பதிவு
=================================================================
பதிவு எழுத தூண்டுதலாக இருந்த அண்ணன் செந்தில் அவர்களுக்கு 

இது என்னுடைய முதல் பதிவு பிடித்திருந்தால் ஊக்கமளியுங்கள் 
அன்புடன் 
நெல்லை பெ. நடேசன் <a href='http://ta.indli.com'> <img src='http://img.indli.com/banners/indli-ta-button.gif' alt='இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்' ></a>

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

அய்யாவழி

அய்யாவழி

அய்யா துணை
இது என்னுடைய முதல் பதிவு நான் வணங்கும் அய்யா வைகுண்டரின் அருளாசியோடு நான் பதிவுலக்கு வருகிறேன் உங்கள் மேலான ஊக்கம் என்னை மேலும் பயணிக்க வைக்கும் என்று நம்புகிறேன்.

மேலே காணும் புகைப்படம் எங்கள் ஊர் அய்யா கோவில் புகைப்படம் நெல்லை மாவட்டத்தின் தென் கோடியில் உள்ள ஒரு சிறிய கிராமம் மதகநேரி மழைவளம் குறைந்த ஒரு கிராமம். ஆனால் நிறைய பேர் வெளிநாட்டில் வேலை பார்கிறார்கள்.

அய்யாவழி குடும்பத்தில் பிறந்த "பரதேசி" என்கின்ற ஒரு பக்தர் பல வருடங்களுக்கு முன்பு அய்யா தேர் கொண்டு வந்து இருக்கிறார்கள் நான் இன்றோடு வனவாசம் செல்கிறேன் என்னை யாரும் தேடவேண்டாம் மூன்றாம் தலைமுறையில் நான் வருவேன் என்று கூறி இருந்ததாகவும் மனைவி மற்றும் உறவினர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் அவரை ஒரு அறையில் அடைத்து வைத்திருந்ததாகவும் காலையில் சென்று பார்த்த பொது அவர் அங்கு இல்லை என்றும் வனவாசம் சென்று விட்டதாகவும் இன்றும் ஊர் மக்கள் நம்புகிறார்கள் . அவருடைய மனைவியும் சமாதி இந்த கோவிலுக்கு அருகிலேயே உள்ளது .

அவர் செல்வதற்கு முன்பு ஏடு ஒன்று எழுதி வைத்திருந்தார்கள்  அந்த ஏடு ஓலை சுவடிகளில் எழுதப்பட்டுள்ளது. அதில் பல விஷயங்கள் எழுதப்பட்டுள்ளது(ஓலை சுவடி பற்றி தமிழில் ஆய்வு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும் mailto:nadesanp@gmail.com
இப்பொழுது  இந்த கோவில் அவருடைய வாரிசுகள் எங்களுக்குத்தான் கோவில் என்று கூறுகிறார்கள் ஆனால் பொது மக்கள் இது உலகம் மக்கள் அனைவருக்கும் பொதுவானதே என மக்கள் வாதம் செய்கின்றனர். இந்த பிரச்சினைதான் இப்பொழுது நடந்து கொண்டு இருக்கிறது. அவர் எழுதிய ஏடு இப்பொழுது அந்த கோவிலின் முன்னாள் கோவில் பூசாரியின் வீட்டில் உள்ளது.

இந்த கோவிலில் தினமும் மூன்று வேளை பூஜை நடக்கிறது. வருடம் ஆவணி,தை,வைகாசி, ஆகிய மூன்று மாதங்களில் திருவிழா நடக்கிறது ஆனிமாதம் 9 ம் தேதி திருஏடு வாசிப்பு நடக்கிறது.

இப்பொழுது ஊர் மக்களுக்கும் சாமியார் குடும்பதினர்களுக்கும் பேச்சு வார்த்தை நடத்தி நிலைமை காவல் நிலையம் வரை சென்று விட்டது இனி அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்

இது என்னுடைய முதல் பதிவு எனக்கு மேலும் ஊக்கம் தர உங்கள் ஆதரவை வேண்டுகிறேன்.
வாழ்க வளமுடன்
அன்புடன்
நெல்லை நடேசன்
துபாய் அமீரகம்