ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

அய்யாவழி

அய்யாவழி

அய்யா துணை
இது என்னுடைய முதல் பதிவு நான் வணங்கும் அய்யா வைகுண்டரின் அருளாசியோடு நான் பதிவுலக்கு வருகிறேன் உங்கள் மேலான ஊக்கம் என்னை மேலும் பயணிக்க வைக்கும் என்று நம்புகிறேன்.

மேலே காணும் புகைப்படம் எங்கள் ஊர் அய்யா கோவில் புகைப்படம் நெல்லை மாவட்டத்தின் தென் கோடியில் உள்ள ஒரு சிறிய கிராமம் மதகநேரி மழைவளம் குறைந்த ஒரு கிராமம். ஆனால் நிறைய பேர் வெளிநாட்டில் வேலை பார்கிறார்கள்.

அய்யாவழி குடும்பத்தில் பிறந்த "பரதேசி" என்கின்ற ஒரு பக்தர் பல வருடங்களுக்கு முன்பு அய்யா தேர் கொண்டு வந்து இருக்கிறார்கள் நான் இன்றோடு வனவாசம் செல்கிறேன் என்னை யாரும் தேடவேண்டாம் மூன்றாம் தலைமுறையில் நான் வருவேன் என்று கூறி இருந்ததாகவும் மனைவி மற்றும் உறவினர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் அவரை ஒரு அறையில் அடைத்து வைத்திருந்ததாகவும் காலையில் சென்று பார்த்த பொது அவர் அங்கு இல்லை என்றும் வனவாசம் சென்று விட்டதாகவும் இன்றும் ஊர் மக்கள் நம்புகிறார்கள் . அவருடைய மனைவியும் சமாதி இந்த கோவிலுக்கு அருகிலேயே உள்ளது .

அவர் செல்வதற்கு முன்பு ஏடு ஒன்று எழுதி வைத்திருந்தார்கள்  அந்த ஏடு ஓலை சுவடிகளில் எழுதப்பட்டுள்ளது. அதில் பல விஷயங்கள் எழுதப்பட்டுள்ளது(ஓலை சுவடி பற்றி தமிழில் ஆய்வு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும் mailto:nadesanp@gmail.com
இப்பொழுது  இந்த கோவில் அவருடைய வாரிசுகள் எங்களுக்குத்தான் கோவில் என்று கூறுகிறார்கள் ஆனால் பொது மக்கள் இது உலகம் மக்கள் அனைவருக்கும் பொதுவானதே என மக்கள் வாதம் செய்கின்றனர். இந்த பிரச்சினைதான் இப்பொழுது நடந்து கொண்டு இருக்கிறது. அவர் எழுதிய ஏடு இப்பொழுது அந்த கோவிலின் முன்னாள் கோவில் பூசாரியின் வீட்டில் உள்ளது.

இந்த கோவிலில் தினமும் மூன்று வேளை பூஜை நடக்கிறது. வருடம் ஆவணி,தை,வைகாசி, ஆகிய மூன்று மாதங்களில் திருவிழா நடக்கிறது ஆனிமாதம் 9 ம் தேதி திருஏடு வாசிப்பு நடக்கிறது.

இப்பொழுது ஊர் மக்களுக்கும் சாமியார் குடும்பதினர்களுக்கும் பேச்சு வார்த்தை நடத்தி நிலைமை காவல் நிலையம் வரை சென்று விட்டது இனி அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்

இது என்னுடைய முதல் பதிவு எனக்கு மேலும் ஊக்கம் தர உங்கள் ஆதரவை வேண்டுகிறேன்.
வாழ்க வளமுடன்
அன்புடன்
நெல்லை நடேசன்
துபாய் அமீரகம்