திங்கள், 10 ஜனவரி, 2011

அம்மா அப்பா

அம்மா அப்பா நினைவஞ்சலி


"தாயிற் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை"
எவ்வளவு உண்மையான வரிகள் ஆம் அவர்கள் நம்முடன் இருக்கும் பொது அவர்கள் அருமை தெரியவில்லை இப்பொழுது புலம்பி என்ன செய்ய...........
அம்மாவுடன் மேல்நிலை இரண்டாம் ஆண்டு வரை அம்மா அருகிலேய படுத்திருந்த நினைவுகள் மேல்நிலை இரண்டாம் ஆண்டு முடித்து விட்டு மும்பை செல்லும்போது பேருந்து நிலையத்தில் கண்ணீர் விட்டு அழுதது அன்று முழுவதும் அழுதுகொண்டே இருந்தார்களாம்  (அக்கா சொல்லி தெரிந்தது ) காலம் கடந்து விட்டது 14  வருடங்கள் 14  நாட்களாக கடந்துவிட்டது தினமும் நினைக்கிறேன் தினமும் கண்ணீர் வருகிறது அப்பா ஒரு நாளும் எங்களை கண்டு கொண்டதே இல்லை என்று கூறலாம் .

ஆனால் இரவு அப்பாவும் அம்மாவும்  பேசி கொள்வது இன்னும் காதில்  கேட்கிறது நான்கு பெண் குழந்தைகள் வயதுக்கு வந்து விட்டார்கள் நான்கு பேரையும் எப்படி திருமணம் செய்து வைக்க போகிறோம்.ஆனால் எனக்கும் விசா கிடைத்தது துபாய் செல்வதற்கு ஏற்பாடு செய்து கொண்டு இருக்கும் பொழுது அம்மா இறந்து விட்டார்கள் அதற்கு பிறகுதான் வாழ்கையில் ஒரு தேடுதல் எனக்கு வந்தது. 

அதன் பிறகு நான்கு சகோதரிகளுக்கும் திருமணம் முடிந்தது கடைசி தங்கையின் திருமண நாள் அன்று கடைசியில் அப்பா அம்மா முன்பு இரவில் பேசிய வார்த்தைகள் மனதில் வந்து இன்ப கண்ணீராக மாறியது. இப்போதும் ஒருகணம் அவர்களை நினைத்தால் அப்போதே மனதில் ஒரு தைரியம் ஒரு நல்ல தெளிவு கிடைகிறது நாளை (11 /01 /2011 ) அம்மாவின் நினைவு நாள் நீ நினைத்தது போல் நான் நன்றாக இருக்கிறேன் அம்மா உன் பாதங்களுக்கு என் மலரஞ்சலி


   இப்போது துபாய் வாழ்கை என்மகன் இப்போது கேட்கிறான் அப்பா இனி ஊருக்கு வந்து விடுங்கள் துபாய் போக வேண்டாம் என்று தொலை பேசியில் கூறுகிறான்

இதோ அப்பா வந்து விடுகிறேன்

ஏதோ மனதில் தோன்றியதை எழுதினேன் பிடித்திருந்தால் ஒட்டு போடுங்கள்

அன்புடன்
 நெல்லை பெ.நடேசன்
அமீரகம்